One Word Many Meanings Tamil

Each Classical Tamil word has many possible meanings

Because in incantation languages like Classical Tamil, each word has many possible meanings to it, with mind humbly invoking Lord Siva's Grace, we just have to look into the classical Tamil dictionary for the meaning of each word in a Tirumantiram verse that yields a coherent and wholesome meaning.

Tuesday, April 30, 2013

Body and world only for us to start searching within our body

1 அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கு மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கி மிகாமை வைத்தான் 2 தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் 3 பொருள் தானுமே.  87.

1 அங்கி = சட்டை = பொதி = தொகுதி 
தமிழ் = நீர்மை = நிலை பரம் = நிலை மேலான 

3 பொருள் = அருத்தாபத்தி உடைமை = சொல்லிய ஒன்றைக் கொண்டு சொல்லாத ஒன்றை அறிதல் = உய்த்து அறிதல் 

தொகுதி மிகுந்து விடாமல் உடலை வைத்தான் (இறைவன்).
எங்கு மிகுந்து விடாமல் வைத்தான் உலகங்கள் ஏழினையும் ? (அவ்வுடற்றொகுதியிலென்க.)4
(இறைவன் தான் அவற்றுள்) தங்கி மிகுந்து விடாமல் வைத்தான் நிலை மேலான சாத்திரங்கள்.
(அச்சாத்திரங்களுள் தான்) பொங்கியெழுந்து  மிகுந்து விடாமல் வைத்தான் உய்த்து அறிதல் தானுமே.

                                                          4....எண்ணில் 

உடல் பஞ்ச கோச உரு அதனால் ஐந்தும் 
உடல் என்னும் சொல்லில் ஒடுங்கும் - உடல் அன்றி 
உண்டோ உலகம் உடல் விட்டு உலகத்தைக் 
கண்டார்  உளரோ கழறுவாய்...

என்னும் பகவான் ரமண மஹர்ஷிகளின் "உள்ளது நாற்பது" என்னும் கலி வெண்பாவின் ஐந்தாம் சரணத்தினின்று 
உடல் இருப்பதாலேயே உலகம் தோற்றத்தில் வந்தமைகின்றது என்று தெளியப்படத்  தக்கதாம்.

இவ்வாறாக, உள்ளின்று வெளியாக ஐந்து கோசங்களாகவும் (பூத, ப்ராண, சூக்கும, விஞ்ஞான மற்றும் ஆனந்த மய கோசங்கள்)
கீழின்று மேலாக ஏழு ஆதார நிலைகளாகவும் (மூலாதார, சுவாதிஷ்டான, மணிபூரக, அனாஹத, விசுத்தி, ஆஞா மற்றும் சஹாஸ்ரார ஆதார நிலைகளாகவும்) இலங்கும் அனைத்தும் "உடல்" என்னும் சொல்லில் ஒடுங்கும் எனலாம்.

உலகங்கள் ஏழினையும் (மிகுந்து விடாமல்) எண்ணிக்கையிலடங்குவனவாக
(ஏழு ஆதார நிலைகளாகிய) உடற்றொகுதிகளிலேயே  இறைவன் வைத்தான்.
நிலை மேலான சாத்திரங்களுள் தான் தங்கி அவற்றை எண்ணிக்கையிலடங்குவனவாக வைத்தான்.
அச்சாத்திரங்களுள் தான் பொங்கியெழுந்து அவற்றில் 'உய்த்து அறிதல்' மிகுந்து விடாமல் வைத்தான்.
அதாவது, உய்த்து அறிய வேண்டுவனவற்றைத் தானே அகத்தே எழுவித்து விளக்கியருளினன் என்க.

நாம் நம் உடற்றொகுதிகளுள்ளேயெ தேடுதல் துவங்குவதற்கே,
நமக்கு உடலும், அதனைச் சார்ந்தெழும் உலகமும் வந்தமைந்தனவாம்.

Collection excessive-not kept(,) body kept(,)
Where excessive-not kept worlds seven ?
Abiding(,) excessive-not kept abidance-High scriptures(,)
Welling up(,) excessive-not kept 'inferring' itself.

Sunday, April 21, 2013

Through Self-Inquiry to experience bodily bliss, we have got our body

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு0 மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.  85.

1  நான் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த உலகம் !
2  1அக வெளியைப் பிடித்தவாறு நின்ற 2இன்பத்தை நான் சொல்ல முற்படின்,
3  "  3இவ்வுடலைப் பற்றி நின்ற உணர்வினை(,) எய்துகின்ற  4இன்பம்
4   5தான் பற்றப் பற்றத் தானே தலைப்பட்டு வெளிப்படத் துவங்கும்."

0  உணர்வுறு = உணர்வினை + உறு - இரண்டாம் வேற்றுமைத் தொகை 

 வான் = ஆகாயம் = அக வெளி 

2  மறைப் பொருள் = மறைவுப்  பொருள் = (புறத்தே உடலில் தோன்றி வெளிப்படாது அக வெளியில்) மறைந்து இலகும் இன்பம்

3 ஊன் = மாமிசம் = மாமிசத்தினால் ஆகிய பௌதிக உடல் 

மந்திரம் = கள் - களிப்பு 

5  தான் = நான்-நான் = ஆன்ம உணர்வு
    தன்மை-முன்னிலை = நான் இந்த உடல் எனும் முதல் எண்ணம் = அகந்தை
    முன்னிலை = நீ, நீங்கள் போன்ற எதிரீட்டுத் தொடர் எண்ணங்கள்;    
    படர்க்கை = அவன், அவள் போன்ற எதிரீட்டு விரிவுத் தொடர் எண்ணங்கள்; 
    மனம் = அகந்தை +  முன்னிலை + படர்க்கை = நுட்ப மெய் = உணர்வு -உணர்வின்மை -முடிச்சு = பசு 

இன்பமானது நம் அக வெளியைப் பற்றியவாறு, சொல்லொணா வண்ணம் நிற்பதாம்.
அது சொல்லத் தகுந்தப் நம் பௌதிக உடலைப் பற்றி நின்ற உணர்வினை அடைய வல்லதாம்.  எப்பொழுதெனின், நாம் ஆன்ம உணர்வினைப் பற்றத் துவங்கும் பொழுதேயாம்.
இதற்குத் தன்னாட்டத்தையன்றி வேறு எந்த முயற்சியும் தேவைப்படுவதன்று
என்றும் திருமூலர் இங்கு தெளிவுபடுத்தியருளியிருக்கின்றார்.

ஆன்ம நாட்டத்தின் மூலம் அகவின்பம் பௌதிக உடலில் வெளிப்படுவதற்காகவே,
அவ்வுடல் நமக்கு வந்தமைந்திருப்பதாம்.

May this universe obain the bliss I obtained !
If I utter the inexpressible inner-space-latching-on-bliss,
as Self(-awareness) increasingly latches on (to us), 
will manifest of itself, body-latching-on-bliss.

" 1  'ஊன் ஆர் உடல் இதுவே நான் ஆம்' எனும் நினைவே,
   2  நானா (பல வித) நினைவுகள் சேர் ஓர் நார்...",
 என்ற பகவான் ரமண மஹர்ஷிகள் அருளிய 'ஆன்ம வித்தைக் கீர்த்தனத்தின்' 2-ம் சரணத்தின் மேற்கூறிய முதல் 2 வரிகளினின்று தெரிந்தெடுக்கப்பட்ட சொற்களின் பொருள் இங்கு அறியத்தக்கதாம்.  

'மாமிசத்தினால் ஆகிய இந்த உடலே நான்' என்ற 'தன்மை-முன்னிலை' எண்ணமே, மற்றப் பல விதமான முன்னிலை மற்றும் படர்க்கை எண்ணங்கள் சேர்கின்ற ஓர் நார் போன்றதாகும்.  

அதாவது, மனமாகிய 'மாலை'யானது, 
a)  i)   'நீ', 'நீவிர்' முதலான முன்னிலை எண்ணங்கள், மற்றும் 
     ii)  'அவன்', 'அவள்', 'அது', 'அவர்கள்' முதலான படர்க்கை எண்ணங்கள், 
    ஆகிய மலர்களால், 
b)  அவை யாவற்றையும் ஒருங்கிணைத்தவாறு இலகும் 'நான் இந்த உடல்' என்னும் 'தன்மை-முன்னிலை' எண்ணமாகிய நாரின் 
     மீது,
தொடுக்கப்பட்டுயிலகுவதாகும்.   

"2...................................................எனும் அதனால்
  3 நான் 'ஆர்' இடம் எது என்று உள் போனால் நினைவுகள் போய்
  4 'நான்-நான்' எனக் குகையுள் தானாய்த் திகழும் 
  ஆன்ம ஞானமே...
  மேலே கூறப்பட்ட ஆன்ம வித்தைக் கீர்த்தனத்தின் 2-ம் சரணத்தின் 2 மற்றும் அதற்கு மேம்பட்ட வரிகளினின்று 
  தெரிந்தெடுக்கப்பட்ட சொற்களின் பொருளும் இங்கு அறியப்படவேண்டுவதேயாம்.  

  மேற்கூறியவாறு மனமாகிய மாலையானது  முன்னிலை மற்றும் படர்க்கை எண்ணங்களாகிய மலர்களாலும் 'நான் இந்த உடலே" 
  என்னும் 'தன்மை-முன்னிலை' எண்ணமாகிய நாரினாலும் தொடுக்கப்பட்டுயிலகுவதால், 'நான் இந்த உடல்' என்கின்ற 'தன்மை-
  முன்னிலை' எண்ணம் எவ்விடத்தினின்று 'தோன்றுகிறது' என்று ஆராய்ந்தவாறு தனக்குள்ளே அமிழந்தால், அனைத்து 
  எண்ணங்களும் (முன்னிலை, படர்க்கை எண்ணங்கள் தன்மை-முன்னிலை எண்ணத்தோடு சேர்ந்து) மறைந்து போய் 'நான்-நான்' 
  என்றவாறு இதயக்குகையுள் 'தான்' ஆகத் திகழும் ஆன்ம ஞானம், என்று பகவான் ரமண மஹர்ஷிகள் கூறியருளியுள்ளார்.  

  எனவே, 
  a)  'தான்' ஆகத் திகழ்வது 'நான்-நான்' என்று இலகும் மெய்த் 'தன்மை'யாகியஆன்மாவே என்றும், 
  b)  அந்த ஆன்மாவின் ஞானமானது 'நான் இந்த உடல்' என்னும் அகந்தையாகியத் தன்மை-முன்னிலை உணர்வு எங்கிருந்து 
       தோன்றுகிறது என்னும் 'தன்னாட்டத்தினாலேயே உதிக்கும் என்றும், 
  இத்திருமந்திரத்தின் மெய்ப்பொருளை ஆராயும் தருணத்திலே அறியப்படத்தக்கதாகும். 
  

a)   திருமூலரால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அருளப்பெற்ற இத்திருமந்திரத்தின் உட்கிடக்கை இதுகாறும் 
      என்னுள் தோன்றி ஒளிவிட்டு இலகாமை குறித்து, நான் என்னுடைய குறுகிய புற நோக்கின் மூலமாகவே அதனை 
      ஊகித்து உய்த்து உணர முயன்றவாறிருக்கும் மெய்ம்மையைத் தெளிவுபடுத்துமாறும்,
b)  திருமந்திரங்களின் உட்கிடக்கைகளைத் தெளிவுபடுத்தும் இச்செயலும், என்னாலன்றிச் சத்குருவாம் திருமூலரின் 
      திருவருளாலேயே நிகழ்ந்தவாறிருக்கும் மெய்ம்மையைத் தெளிவுபடுத்துமாறும்,
'நிற்பதாம்' முதலான வினைச்சொற்களைக் கையாண்டுள்ளேன்.  

I obtained bliss obtain-may this-universe
inner-space latching-on-abided hidden-thing utter-if(-I)
flesh-latching-on abided awareness-attaining bliss
(as the) Self latches on manifest-will of-itself(!)




Saturday, April 20, 2013

Body is for perceiving self as mind covering body - TM 84

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.   84.

1  சித்தத்தின் உள்ளே பெருகித் தோன்றும் 'இழை நூல்களிலும்'
2  'முதன்மையாகக்' கூறப்பட்ட 'தொகுப்பாகிய (ஆழ்மனத்தினைப்)' (subconscious)
3  பொருந்துகின்ற இந்தப் (பௌதிக) உடலையும்
    உள் (அடக்கி ஊடுருவி) நின்ற தோற்றமாகிய (சூக்கும உடலாகிய மனமானது)
4  இறைவன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.

மனச்சத்தினுள்ளே இழை நூல் தொகுப்புகள் பல பெருகித் தோன்றுவனவாம்.  அவை பலவற்றிலும் ஆழ்மனமாகிய தொகுப்பே முதன்மையாகக் கூறப்பட்டதாம்.  ஏனெனின்,  ஆழ்மனமே முதலில் நம்மால் எதிரிட்டு முன்னிலையாக அறியப்படும் தொகுப்பாம்.  இந்த ஆழ்மனத்தில் அடங்கியுள்ள எண்ணங்களின்  இயற்கைச் சக்தியை ஒத்தே, நம்முடைய பௌதிக உடல் நமக்கு வந்துப் பொருந்தியமைவதாம்.  இக்கருத்துக்களையே இத்திருமந்திரத்தின் முதல் இரண்டு வரிகளில் திருமூலர் கூறியருளியிருக்கின்றார்.   

எல்லா உயிர்களுக்கும் இறைவன் சூக்குமமாகிய மனத்தினை அளித்திருக்கின்றான் எனினும், அவர்கள் அனைவரும் பொதுவாகத், தத்தம் பௌதிக உடலின் ஓர் அங்கமே ஆன மூளையிலே சிந்திப்பதாகவே  உணர்ந்து வாழ்ந்த வண்ணமிருக்கின்றனர்.  ஆனால், திருமூலரோ, தன் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்பதாகிய மனமாகத், தன்னைத் தான் உணரத் துவங்கிய அனுபவத்தைத், தான் இறைவன் அருளாலேயே பெற்று இலகியதாக, இத்திருமந்திரத்தில் கூறியருளியுள்ளார்.  அதாவது, இறைவன் அருளாலேயே ஒருவர் தன்னைத் தன்னுடையப் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்பதாகிய மனமாக உணரத் துவங்குகிறார், என்பதாம்.  இத்தகைய அனுபவத்தையே 'தொம்பைக்கூடு' போன்றது இம்மனம், என்று திருமந்திரத்தைத் தழுவித் திருவாசகத்திற்குத் தாம் எழுதிய உரையில், சிவயோகி திரு இரத்தின சபாபதிப் பிள்ளையவர்கள் குறிப்பிட்டிருப்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது.

இறைவன் அருளால் தன்னுடையப் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்கும் மனமாகத் தன்னை உணரத் துவங்கும் அக விழிப்பினைப் பெறுவதற்கே பௌதிக உடல் வந்தமைந்திருப்பதாம்.

Mind-stuff-of within welling-up threads-among
first as(!) stated woven-aggregate of subconscious-to
merging body-even within-(encompassing and permeating)-abided rising
Lord me-to here Grace-by granted(!)

Our physical body (at the time of a fresh birth)
merges into the woven-aggregate of our subconscious (from the past births)
which is stated as the first among the threads welling up within our mind-stuff.
The rising (of the subtle body) that abided
encompassing within itself and permeating even such a physical body,
the Lord granted to me here by His Grace.