யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு0 மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே. 85.
1 நான் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த உலகம் !
2 1அக வெளியைப் பிடித்தவாறு நின்ற 2இன்பத்தை நான் சொல்ல முற்படின்,
3 " 3இவ்வுடலைப் பற்றி நின்ற உணர்வினை(,) எய்துகின்ற 4இன்பம்
4 5தான் பற்றப் பற்றத் தானே தலைப்பட்டு வெளிப்படத் துவங்கும்."
0 உணர்வுறு = உணர்வினை + உறு - இரண்டாம் வேற்றுமைத் தொகை
1 வான் = ஆகாயம் = அக வெளி
2 மறைப் பொருள் = மறைவுப் பொருள் = (புறத்தே உடலில் தோன்றி வெளிப்படாது அக வெளியில்) மறைந்து இலகும் இன்பம்
3 ஊன் = மாமிசம் = மாமிசத்தினால் ஆகிய பௌதிக உடல்
4 மந்திரம் = கள் - களிப்பு
5 தான் = நான்-நான் = ஆன்ம உணர்வு;
தன்மை-முன்னிலை = நான் இந்த உடல் எனும் முதல் எண்ணம் = அகந்தை;
முன்னிலை = நீ, நீங்கள் போன்ற எதிரீட்டுத் தொடர் எண்ணங்கள்;
படர்க்கை = அவன், அவள் போன்ற எதிரீட்டு விரிவுத் தொடர் எண்ணங்கள்;
மனம் = அகந்தை + முன்னிலை + படர்க்கை = நுட்ப மெய் = உணர்வு -உணர்வின்மை -முடிச்சு = பசு
இன்பமானது நம் அக வெளியைப் பற்றியவாறு, சொல்லொணா வண்ணம் நிற்பதாம்.
அது சொல்லத் தகுந்தப் நம் பௌதிக உடலைப் பற்றி நின்ற உணர்வினை அடைய வல்லதாம். எப்பொழுதெனின், நாம் ஆன்ம உணர்வினைப் பற்றத் துவங்கும் பொழுதேயாம்.
இதற்குத் தன்னாட்டத்தையன்றி வேறு எந்த முயற்சியும் தேவைப்படுவதன்று
என்றும் திருமூலர் இங்கு தெளிவுபடுத்தியருளியிருக்கின்றார்.
ஆன்ம நாட்டத்தின் மூலம் அகவின்பம் பௌதிக உடலில் வெளிப்படுவதற்காகவே,
அவ்வுடல் நமக்கு வந்தமைந்திருப்பதாம்.
May this universe obain the bliss I obtained !
If I utter the inexpressible inner-space-latching-on-bliss,
as Self(-awareness) increasingly latches on (to us),
will manifest of itself, body-latching-on-bliss.
" 1 'ஊன் ஆர் உடல் இதுவே நான் ஆம்' எனும் நினைவே,
2 நானா (பல வித) நினைவுகள் சேர் ஓர் நார்...",
என்ற பகவான் ரமண மஹர்ஷிகள் அருளிய 'ஆன்ம வித்தைக் கீர்த்தனத்தின்' 2-ம் சரணத்தின் மேற்கூறிய முதல் 2 வரிகளினின்று தெரிந்தெடுக்கப்பட்ட சொற்களின் பொருள் இங்கு அறியத்தக்கதாம்.
'மாமிசத்தினால் ஆகிய இந்த உடலே நான்' என்ற 'தன்மை-முன்னிலை' எண்ணமே, மற்றப் பல விதமான முன்னிலை மற்றும் படர்க்கை எண்ணங்கள் சேர்கின்ற ஓர் நார் போன்றதாகும்.
அதாவது, மனமாகிய 'மாலை'யானது,
a) i) 'நீ', 'நீவிர்' முதலான முன்னிலை எண்ணங்கள், மற்றும்
ii) 'அவன்', 'அவள்', 'அது', 'அவர்கள்' முதலான படர்க்கை எண்ணங்கள்,
ஆகிய மலர்களால்,
b) அவை யாவற்றையும் ஒருங்கிணைத்தவாறு இலகும் 'நான் இந்த உடல்' என்னும் 'தன்மை-முன்னிலை' எண்ணமாகிய நாரின்
மீது,
தொடுக்கப்பட்டுயிலகுவதாகும்.
"2...................................................எனும் அதனால்
3 நான் 'ஆர்' இடம் எது என்று உள் போனால் நினைவுகள் போய்
4 'நான்-நான்' எனக் குகையுள் தானாய்த் திகழும்
ஆன்ம ஞானமே...
மேலே கூறப்பட்ட ஆன்ம வித்தைக் கீர்த்தனத்தின் 2-ம் சரணத்தின் 2 மற்றும் அதற்கு மேம்பட்ட வரிகளினின்று
தெரிந்தெடுக்கப்பட்ட சொற்களின் பொருளும் இங்கு அறியப்படவேண்டுவதேயாம்.
மேற்கூறியவாறு மனமாகிய மாலையானது முன்னிலை மற்றும் படர்க்கை எண்ணங்களாகிய மலர்களாலும் 'நான் இந்த உடலே"
என்னும் 'தன்மை-முன்னிலை' எண்ணமாகிய நாரினாலும் தொடுக்கப்பட்டுயிலகுவதால், 'நான் இந்த உடல்' என்கின்ற 'தன்மை-
முன்னிலை' எண்ணம் எவ்விடத்தினின்று 'தோன்றுகிறது' என்று ஆராய்ந்தவாறு தனக்குள்ளே அமிழந்தால், அனைத்து
எண்ணங்களும் (முன்னிலை, படர்க்கை எண்ணங்கள் தன்மை-முன்னிலை எண்ணத்தோடு சேர்ந்து) மறைந்து போய் 'நான்-நான்'
என்றவாறு இதயக்குகையுள் 'தான்' ஆகத் திகழும் ஆன்ம ஞானம், என்று பகவான் ரமண மஹர்ஷிகள் கூறியருளியுள்ளார்.
எனவே,
a) 'தான்' ஆகத் திகழ்வது 'நான்-நான்' என்று இலகும் மெய்த் 'தன்மை'யாகியஆன்மாவே என்றும்,
b) அந்த ஆன்மாவின் ஞானமானது 'நான் இந்த உடல்' என்னும் அகந்தையாகியத் தன்மை-முன்னிலை உணர்வு எங்கிருந்து
தோன்றுகிறது என்னும் 'தன்னாட்டத்தினாலேயே உதிக்கும் என்றும்,
இத்திருமந்திரத்தின் மெய்ப்பொருளை ஆராயும் தருணத்திலே அறியப்படத்தக்கதாகும்.
a) திருமூலரால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அருளப்பெற்ற இத்திருமந்திரத்தின் உட்கிடக்கை இதுகாறும்
என்னுள் தோன்றி ஒளிவிட்டு இலகாமை குறித்து, நான் என்னுடைய குறுகிய புற நோக்கின் மூலமாகவே அதனை
ஊகித்து உய்த்து உணர முயன்றவாறிருக்கும் மெய்ம்மையைத் தெளிவுபடுத்துமாறும்,
b) திருமந்திரங்களின் உட்கிடக்கைகளைத் தெளிவுபடுத்தும் இச்செயலும், என்னாலன்றிச் சத்குருவாம் திருமூலரின்
திருவருளாலேயே நிகழ்ந்தவாறிருக்கும் மெய்ம்மையைத் தெளிவுபடுத்துமாறும்,
'நிற்பதாம்' முதலான வினைச்சொற்களைக் கையாண்டுள்ளேன்.
I obtained bliss obtain-may this-universe
inner-space latching-on-abided hidden-thing utter-if(-I)
flesh-latching-on abided awareness-attaining bliss
(as the) Self latches on manifest-will of-itself(!)

No comments:
Post a Comment