One Word Many Meanings Tamil

Each Classical Tamil word has many possible meanings

Because in incantation languages like Classical Tamil, each word has many possible meanings to it, with mind humbly invoking Lord Siva's Grace, we just have to look into the classical Tamil dictionary for the meaning of each word in a Tirumantiram verse that yields a coherent and wholesome meaning.

Wednesday, July 17, 2013

TM 187 - Body is only adoring God daily and knowing beforehand the time of death

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற -போது அவர் அறியார் தாமே (!)  187.

Sprouting beautiful-tender-leaf delicate-flower branch-in
(abiding-)together-were -all pass-by (having-)seen-even
escape-without Lord Feet (bow-down-before).
Calling(-for-departure-from-embodiment-into-disembodied-state-through-death) time
       they(-are) (the-)knowing-not-ones themselves(!)

1  தளிர்-விடுகின்ற அழகிய-இலை-மொட்டு (மற்றும்) மெல்லிய-மலர் (பொருந்திய) வளாரில் (இளங்கொம்பில்)
    கூடியிருகின்றவை எல்லாம் 2  (அவ்வளாரினின்று) கழிந்து போகின்றன என்று கண்டு கொண்ட  
    பின்னரும்(,)  3  தப்பிப் பிழைத்தல் இல்லாமல் (அதாவது, தவறாமல் நாள்தோறும்) சிவபெருமானின்
    திருவடிகளை வணங்க மாட்டார்கள்.
4  (அவ்வாறு வணங்காத அவர்கள்,) உடலை விட்டு விடுமாறு (இயமன்) தம்மை(க் கூவி) அழைக்கும்
    நேரத்தை தாமே அறிய மாட்டாதவர்களே (!)  187.

நமக்கு உடல் வந்தமைந்தமை, தவறாமல் நாள்தோறும் இறைவன் திருவடிகளை வணங்கி, நாம் நம் உடலை விடுவதற்கான தருணத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கேயாமென்க.




No comments:

Post a Comment