1 அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கு மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கி மிகாமை வைத்தான் 2 தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் 3 பொருள் தானுமே. 87.
1 அங்கி = சட்டை = பொதி = தொகுதி
2 தமிழ் = நீர்மை = நிலை பரம் = நிலை மேலான
தொகுதி மிகுந்து விடாமல் உடலை வைத்தான் (இறைவன்).
எங்கு மிகுந்து விடாமல் வைத்தான் உலகங்கள் ஏழினையும் ? (அவ்வுடற்றொகுதியிலென்க.)4
(இறைவன் தான் அவற்றுள்) தங்கி மிகுந்து விடாமல் வைத்தான் நிலை மேலான சாத்திரங்கள்.
(அச்சாத்திரங்களுள் தான்) பொங்கியெழுந்து மிகுந்து விடாமல் வைத்தான் உய்த்து அறிதல் தானுமே.
4....எண்ணில்
உலகங்கள் ஏழினையும் (மிகுந்து விடாமல்) எண்ணிக்கையிலடங்குவனவாக
(ஏழு ஆதார நிலைகளாகிய) உடற்றொகுதிகளிலேயே இறைவன் வைத்தான்.
நிலை மேலான சாத்திரங்களுள் தான் தங்கி அவற்றை எண்ணிக்கையிலடங்குவனவாக வைத்தான்.
அச்சாத்திரங்களுள் தான் பொங்கியெழுந்து அவற்றில் 'உய்த்து அறிதல்' மிகுந்து விடாமல் வைத்தான்.
அதாவது, உய்த்து அறிய வேண்டுவனவற்றைத் தானே அகத்தே எழுவித்து விளக்கியருளினன் என்க.
நாம் நம் உடற்றொகுதிகளுள்ளேயெ தேடுதல் துவங்குவதற்கே,
நமக்கு உடலும், அதனைச் சார்ந்தெழும் உலகமும் வந்தமைந்தனவாம்.
Collection excessive-not kept(,) body kept(,)
Where excessive-not kept worlds seven ?
Abiding(,) excessive-not kept abidance-High scriptures(,)
Welling up(,) excessive-not kept 'inferring' itself.

3 பொருள் = அருத்தாபத்தி உடைமை = சொல்லிய ஒன்றைக் கொண்டு சொல்லாத ஒன்றை அறிதல் = உய்த்து அறிதல்
தொகுதி மிகுந்து விடாமல் உடலை வைத்தான் (இறைவன்).
எங்கு மிகுந்து விடாமல் வைத்தான் உலகங்கள் ஏழினையும் ? (அவ்வுடற்றொகுதியிலென்க.)4
(இறைவன் தான் அவற்றுள்) தங்கி மிகுந்து விடாமல் வைத்தான் நிலை மேலான சாத்திரங்கள்.
(அச்சாத்திரங்களுள் தான்) பொங்கியெழுந்து மிகுந்து விடாமல் வைத்தான் உய்த்து அறிதல் தானுமே.
4....எண்ணில்
உடல் பஞ்ச கோச உரு அதனால் ஐந்தும்
உடல் என்னும் சொல்லில் ஒடுங்கும் - உடல் அன்றி
உண்டோ உலகம் உடல் விட்டு உலகத்தைக்
கண்டார் உளரோ கழறுவாய்...
என்னும் பகவான் ரமண மஹர்ஷிகளின் "உள்ளது நாற்பது" என்னும் கலி வெண்பாவின் ஐந்தாம் சரணத்தினின்று
உடல் இருப்பதாலேயே உலகம் தோற்றத்தில் வந்தமைகின்றது என்று தெளியப்படத் தக்கதாம்.
இவ்வாறாக, உள்ளின்று வெளியாக ஐந்து கோசங்களாகவும் (பூத, ப்ராண, சூக்கும, விஞ்ஞான மற்றும் ஆனந்த மய கோசங்கள்)
கீழின்று மேலாக ஏழு ஆதார நிலைகளாகவும் (மூலாதார, சுவாதிஷ்டான, மணிபூரக, அனாஹத, விசுத்தி, ஆஞா மற்றும் சஹாஸ்ரார ஆதார நிலைகளாகவும்) இலங்கும் அனைத்தும் "உடல்" என்னும் சொல்லில் ஒடுங்கும் எனலாம்.
உலகங்கள் ஏழினையும் (மிகுந்து விடாமல்) எண்ணிக்கையிலடங்குவனவாக
(ஏழு ஆதார நிலைகளாகிய) உடற்றொகுதிகளிலேயே இறைவன் வைத்தான்.
நிலை மேலான சாத்திரங்களுள் தான் தங்கி அவற்றை எண்ணிக்கையிலடங்குவனவாக வைத்தான்.
அச்சாத்திரங்களுள் தான் பொங்கியெழுந்து அவற்றில் 'உய்த்து அறிதல்' மிகுந்து விடாமல் வைத்தான்.
அதாவது, உய்த்து அறிய வேண்டுவனவற்றைத் தானே அகத்தே எழுவித்து விளக்கியருளினன் என்க.
நாம் நம் உடற்றொகுதிகளுள்ளேயெ தேடுதல் துவங்குவதற்கே,
நமக்கு உடலும், அதனைச் சார்ந்தெழும் உலகமும் வந்தமைந்தனவாம்.
Collection excessive-not kept(,) body kept(,)
Where excessive-not kept worlds seven ?
Abiding(,) excessive-not kept abidance-High scriptures(,)
Welling up(,) excessive-not kept 'inferring' itself.
No comments:
Post a Comment