One Word Many Meanings Tamil

Each Classical Tamil word has many possible meanings

Because in incantation languages like Classical Tamil, each word has many possible meanings to it, with mind humbly invoking Lord Siva's Grace, we just have to look into the classical Tamil dictionary for the meaning of each word in a Tirumantiram verse that yields a coherent and wholesome meaning.

Friday, May 10, 2013

We got our body only for perceiving our bliss-body - TM 113

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்க்கொண்டு
தண் நின்ற தாளை தலைக்கு ஆவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர்(கின்ற) ஒப்பிலா ஆனந்தக்-
-கண் இன்று காட்டிக் களிம்பு அறுத்தானே.  113.

விண்ணின்று = விண்ணினின்று = திரிபு; ஈடு = மருந்து
தண் = அருள்; தலைக்காவல் = தலைக்கு + ஆவல்; தலை = வான் = ஆகாயம்
ஓர்(கின்ற) = உணர்கின்ற; ஒப்பிலா = போலுகையிலா
கண் = உடம்பு; இன்று = இப்பொழுது; களிம்பு = மாசு; அறுத்தானே = முடிவு செய்தானே(!)

1  விண்ணிலிருந்து இறங்கி (விளைந்து வரவிருக்கும் முன்)
    வினை (ப்பயனுக்கு) மருந்தாக உடலைத் தரித்து(,)
2  அருள் அமைந்த திருப்பாதங்களை (தலைக்கு மேல்)
    ஆகாய வெளிக்கு (விழைவுற்றிலகும் திருமூலனாகிய எனக்கு) முன்பாக வைத்து(,)
3  உள்ளே நிலைபெற்று நின்று உருக்கி உணர்கின்ற(,) போலுகையில்லாத  ஆனந்த
4  (மய கோசமாகிய) உடலை (எனக்குக்) இபொழுது காட்டி(,)
    (என்னுடைய) மாசினை முடிவு செய்தானே(!)

(இறைவன்) நம்முடைய பௌதிக உடலைத் தரித்தது
நாம் நமது ஆனந்தமயமாகிய அகவுடலை காணப்பெறற்கேயென்க.

Sky-from descended fate-to medicine body-held-on-to
Grace abided Feet sky-to aspiration before retained
Within abiding melted perceiving similarity-without bliss-
-body this-moment showed impurity ended-O(!)



No comments:

Post a Comment