முதலாம் தந்திரம் -
3 - செல்வம்0 நிலையாமை
தன்-அது1சாயை தனக்குதவாத2து கண்டும்2
என்-அது1 (என்-)மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்
உன்-உயிர் போம்-உடல் ஒக்கப் பிறந்தது
கண்-அது3 காண்-ஒளி கண்டுகொளீரே. 170.
1 Self-of shadow self-helping-not seeing-even-after
2 my-of my-in thus abide (the-)ignorant
3 Your-life fleeting-body adjoining born-was
4 Body-that seeing-Light having-seen-own(-it-up-as-the-Self).
சாயை = நிழல்;
மாடு = "இல்", "இடத்தில்" என்ற பொருட்களிலகும் ஏழாம் வேற்றுமை உருபு;
கண் = உடம்பு
1 தன்னுடைய நிழல் தனக்கு உதவாது என்று கண்டு கொண்ட பின்னரும்
2 என் "உடையது", "இல்" என்றவாறு இருப்பார்கள் அறிவில்லாதவர்கள்.
3 உன்னுடைய உயிரானது "நிலையின்றி அழிந்து போகின்ற" உடல் ஒருசேரப் பிறந்ததாம்.
4 (உடல் அவ்வாறு அழிந்து போவதன் முன்னரே) அந்த உடலினைக் காண்கின்ற
4 ஒளியினைக் கண்டு கொள்வீர்களாக.
0 செல்வம் = செழிப்பு; தன்மை-முன்னிலையாகிய அகந்தை, முன்னிலை படர்க்கை எண்ணங்களுடன் இணைந்து, மனமாகச்
செழிப்புற்று விரிவடைவது குறித்து, செல்வம் என்ற சொல்,-
a) நுகரத்தக்க பொருட்செல்வத்தை மட்டுமன்றி,
b) நுகர்வோனாகிய மனத்தையும்,
குறிக்கவல்லதாம்.
1 அது = "க்கு", "உடைய" என்ற பொருட்களிலிலகும் ஆறாம் வேற்றுமை உருபு;
சரியாகப் பொருளமைதற்குறித்துத் திருத்தியமைக்க நேர்ந்துள்ளது. 1 அது = "க்கு", "உடைய" என்ற பொருட்களிலிலகும் ஆறாம் வேற்றுமை உருபு;
2 "உதவாதது" மற்றும் "கண்டும்" என்றவாறாக இவ்விரண்டு சொற்களையும்
3 அது = முன்னிலையில் குறிப்பிடப்பெறும் ஒரு பொருள்
4 "Chidabhasa" என்று தன் "Pancadasi" என்னும் ஆன்மீக நூலில் சுவாமி வித்யாரண்யரால் குறிப்பிடப்பெறும்,
சீவனின் மனத்தில் ஆன்மாவின் பிரதிபலிப்பாம் சச்சிதானந்த ஒளி.
a) சூரிய மற்றும் சந்திர ஒளி நமது பௌதிக உடலின் தலைக்கு நேர்மேலாகச் செங்குத்தாக
இலகுங்காலும்,
b) மற்றும் அவ்விரண்டு ஒளிகளும் இலகாத வேளைகலில், காரிருள் சூழ்ந்திலகுங்காலும்,
நமது "உடலிலேயே"அதன் நிழல் அமைந்திலகுகின்றது.
நமது பௌதிக உடலின் தலைக்கி நேர்மேலாகச் செங்குத்தாகவன்றி, ஆனால் உடலிற்கு மேலாக இலகுங்கால், நிழலானது "உடலுடையதாக" அதனின்று வேறுபட்டு இலகுகின்றது.
இருகாலும், நிழலானது அவ்வுடலுக்கு எவ்வித உதவியும் செய்வதாகவமைதில்லை.
இங்கு, நிழலும், அந்நிழல் பொருந்தும் நமது பௌதிக உடலும்,
இத்திருமந்திரத்தில் "நாம் எளிதில் அறியும்வண்ணம் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ள உவமானமாம்".
இதுபோன்றே, நமது நனவு நிலையில்,
a) பல பொருட்கள், நாமாகிய நமது பௌதிக உடலுடையனவாக அவ்வுடலைச் சுற்றியிலகுகின்றன; மற்றும்,
b) பல சிறப்புக்கள், நாமாகிய நமது பௌதிக உடலில் அமைந்திலகுகின்றன.
நம்முடையதாகவோ, நம்மிலிலகுவதாகவோ, நாம் கருதும் எவையும், நமது உயிராகிய சூக்குமவுடலுக்கு எவ்வுதவியையும் செய்வதாகவமைதில்லை. இங்கு, நமது பௌதிக உடலுடைய மற்றும் உடலில் அமைந்திலகும் பொருட்கள் மற்றும் சிறப்புக்களும், நமது உயிராகிய சூக்கும உடலும், இத்திருமந்திரத்தில் "நாமே முயன்று உய்த்துணரும்வண்ணம் சூக்குமமாகக் குறிப்படப்பட்டுள்ள உவமேயமாம்"
இவ்வாறாக, இத்திருமந்திரத்தின் இம்முதலாம் உவமையிலே,
a) i) நமது உயிராகிய சூக்கும உடலுக்கு யாதோர் உதவியும் செய்திடாத,
நாமாகிய பௌதிக உடலுடைய மற்றும் பௌதிக உடலிலிலகும் பொருட்கள்,
ii) நமது பௌதிக உடலுக்கு யாதோர் உதவியையும் செய்திடாத,
நமது பௌதிக உடலின் நிழலுடனும்,
b) i) நமது உயிராகிய சூக்கும உடல்,
ii) நமது பௌதிக உடலுடனும்,
இத்திருமந்திரத்தில் ஒப்பிடப்பட்டுள்ளன எனற்றகும்.
அவ்வாறே, இத்திருமந்திரத்தின் இரண்டாம் உவமையிலே,
a) "நாமே முயன்று உய்த்துணரும்வண்ணம் சூக்குமமாகக் குறிப்படப்பட்டுள்ள உவமானமாம்"
நாமாகிய பௌதிக உடலோடு மற்றும் பௌதிக உடலில் ஒருசேர (முன்வினைப்பயனாகிய விதிவயத்தினால்)
வந்தமைந்துள்ள பொருட்களைப் போலவே,
b) "நாம் எளிதில் அறியும்வண்ணம் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ள உவமேயமாம்"
நமது உயிராகிய சூக்கும உடலோடு மற்றும் சூக்கும உடலிடத்தில் நமது பௌதிக உடல் வந்தமைந்துள்ளதாம்.
சூக்கும உடலானது "நான் இந்த பௌதிக உடல்" என்னும் மூல எண்ணமாகிய தன்மை-முன்னிலை எண்ணத்தோடு உதித்தற்குறித்து, பௌதிக உடல் சூக்கும உடலோடு வந்தமைந்தது எனலாம். ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில், சூக்கும உடலானது பௌதிக உடலைச் ஊடுருவிச் சூழ்ந்து உணரப்பெறுங்கால், பௌதிக உடல் சூக்கும உடலில் வந்தமைந்தது எனலாம்.
a) முதல் உவமையிலே உவமானத்தை வெளிப்படையாகக் விவரித்த திருமூலர்,
b) இரண்டாம் உவமையிலே உவமேயத்தை வெளிப்படையாக விவரித்து,
இத்திருமந்திரத்தின் உட்கிடக்கையை உணர்தலை எளிதாக்கியருளினரென்க.
உடல் நமக்கு வந்தமைந்திருப்பது,
a) அவ்வுடலைத் தானாகக் கொள்வதை விடுத்து,
b) i) அவ்வுடலை முன்னிலையாகக் காணும் எழுவாயாகிய ஒளியைக் கண்டு,
ii) அவ்வொளியைத் தானாகக் கொள்வதற்கேயென்க.
"Merging with Siva" என்னும் தம் ஆன்மீக நூலில் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி கூறியருளியிருக்கும் வண்ணம்,
அனாஹத மற்றும் விசுத்தி சக்கரங்களிலே அனுபவிக்கப்பெறும்,
அன்றியும் அவ்வனுபவத்தினால் ஒருவர் இவ்வண்டத்தோடு தம் ஒருமையை உணர்வதினாலும்,
மற்றும் அவ்வாறு ஒருமையை உணர்தலே ஆன்மீக அனுபவத்தின் சாரமென்பதினாலும்,
b) ஒரு ஆன்மீக சாதகர் அகமுகப்படுகையில் தன் இதயக்குகையில் ஒளிக்கிரணங்களுடன் தொடர்பு கொள்வதினாலேயே
அச்ச்ச்சிதானந்த அனுபவத்தை முழுமையாகப் பெறவியலுமென்பதினாலும்,
c) ஒருவர் முதலில் "தெள்ளிய வெள்ளொளியிலிலகிப் பின்னர் அதனை ஊடுருவிச்
சச்சிதானந்தத்தில் ஆழ்ந்துத் தானாகிய ஆன்மஞானத்தை எய்திய பின்னரே
சிவனோடு ஐக்கியமாதல் எனப்படும் விச்வக்ராசத்தை அனுபவிக்கிறாரென்பதினாலும்,
d) சச்சிதானந்தத்தையனுபவித்தலே ஒளியினை அனுபவித்தலென்பதினாலும்,
e) நம் சூக்கும உடலின் மையமாக இருப்பது சச்சிதானந்தமேயென்பதினாலும்,
f) சச்சிதானந்தமே எல்லா உருவங்களையும் ஊடுருவி நிற்கும் ஒளியென்பதினாலும்,
g) சச்சிதானந்தமே நமது இருப்பிடம் மற்றும் சுற்றுச்சூழல்களை ஊடுருவியவாறு
எல்லாப் பொருட்களின் துகள்களின் வாயிலாகவும் பிதுங்கி வழிந்தவாறிலகும்
நிலைத்த உருவமற்ற எப்பொழுதும் மாறியபடியிலகும் ஒளிக்கோசமானதினாலும்,
அச்சச்சிதானந்த ஒளியே இத்திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
நம் பௌதிக உடலை முன்னிலைப்படுத்திக் காணும் ஒளியாமென்க.
இருப்பினும்,
சுவாமி வித்யாரண்யர் தனது "Pancadasi" என்னும் ஆன்மீக நூலில் கூறியருளியிருக்கும்வண்ணம்,
a) "Chidabhasa" என்னும் சீவனின் புத்தியில் ஆன்மாவின் பிரதிபலிப்பினாலேயே, சீவனின் புத்தி இயங்குகின்றது என்பதினாலும்,
b) ஆன்மாவாம் தன்னை உணரத் துவங்குகையில், அப்பிரதிபலிப்பு தன்னில் ஒடுங்கத் துவங்குகின்றது என்பதினாலும்,
சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி தனது "Merging with Siva" என்னும் ஆன்மீகச் சைவ நூலில் கூறியருளியிருக்கும்வண்ணம்,
a) ஆன்மாவானது கால தேச வர்த்தமானங்கட்கு அப்பாற்பட்டு என்றுமிலகும் பரசிவமானமையினாலும்,
b) தோன்றி நிற்பவைகளை ஊடுருவிப் பிரதிபலித்து நிற்பது என்றுமிலகும் சச்சிதானந்தமேயானமையினாலும்,
ஆன்மாவாம் தன்னை நாடும் தனி மனிதனைப் பொருத்தவரையில்,
a) சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமியால் குறிப்பிடப்பெற்றுள்ள பிரதிபலிக்கும் திறனுள்ள சச்சிதானந்த ஒளியின்,
b) சுவாமி வித்யாரண்யரால் குறிப்பிடப்பெற்றுள்ள "Chidabhasa" என்ற
அத்தனி மனிதனின் புத்தியில் பிரகாசிக்கும் பிரதிபலிப்பே,
என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளல் மிகத்தகும்.
No comments:
Post a Comment