ஒன்றிய ஈரெண்* கலையும் உடல் உற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வார் திகைப்பு ஒழியோரே 185.
Adjoining 2*8* kalas body(-in)-occurring
abided (having-)seen thought-of-not vile-ones-they
Turned-sore Time-God embryo(-mould)**-(woman's-stomach-)pit(-in) (havng)-kept-after
(having-)gone-that-in fall-they bewilderment cease-not-they
*16 kalas = mind + 10 senses + 5 elements
பொருந்திய 16 கலைகளும் (மனம் + 10 புலங்கள் + 5 தத்துவக்கூறுகள்) உடலில் நேர்ந்து தங்கியதைப் பார்த்து கீழ்மக்கள், (இத்தகைய பொருத்தம் எங்ஙனம் நேர்ந்தது) என்று சிந்திக்க மாட்டார்கள். (இத்தகைய கீழ்மக்களைக் கண்டு) நோவுற்ற காலன், கருவாகிய அச்சை பெண்ணின் வயிறாகிய குழியில் வைத்த பிறகு, (சிந்திக்க மாட்டாமையினால்) தம்மில் திகைப்பு நீங்கப் பெறாதவர்களாகிய அக்கீழ்மக்கள், (அக்கருக்குழியில்) சென்று வீழ்ந்து பிறப்பினை எய்திடுவார்கள்.
நமக்கு உடல் வந்தமையப்பெற்றது நமது உடலில் மனம் 10 புலன்கள் மற்றும் 5 தத்துவங்களுடன் எங்ஙனம் வந்து தங்கி நிலை பெறுகின்றது என்று சிந்தித்து அறிந்து, அது குறித்த திகைப்பு நீங்கப்பெற்று, பிறவித் தளையினின்று விடுபடுதற்கேயாமென்க.
** Into the mould of embryo developing into a human child body, during the 5th month of conception, through the hole at the top of the child body's head, called the Brahma Randra, is said to enter the individual soul, as per Upadesa Sahasri of Adi Shankara
No comments:
Post a Comment