Tirumantiram 134 - Tantra 1 - Guru silently ordains merging into Siva
புரையற்ற பாலினுள் நெய்-கலந்தாற் போல்
திரையற்ற சிந்தை-நல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வு-ஓர்(கின்ற) உடம்பு-இங்கு ஒழிந்தால்
கரையற்ற சோதி கலந்த-சத்து ஆமே. 134.
குற்றமற்ற பாலினுள் நெய் கலந்திலகுதற்போல்
அலையற்ற மனத்தைத் தீவிரமான சற்குரு சொல்லுவார்.
சொற்களற்று உணர்வினை ஆராயும் (சூக்கும) உடல் இங்கு ஒழிந்து விடுமேயானால்
கரையற்ற ஒளி ஊடுருவிக் கலந்த இருப்பு ஆமே (!)
பௌதிக உடலைச் சார்ந்திலகும் சூக்கும உடலானது சொற்களை நீக்கி தன் மெய்ம்மையை
ஆராயத்துவங்கின் அதனுள்ளிலகும் கரையற்ற ஒளி ஊடுருவிய இருப்பு வெளிப்படுமென்க.
பௌதிக உடல் நமக்கு அமையபெற்றது, சொற்களைக் கடந்திலகும்
கரையற்ற ஒளிமயமான இருப்புணர்வை வெளிப்படுத்திக்கொள்ளற்கேயென்க.
ஓர் - ஓர்கின்ற
Literal Translation
1 Blemishless milk-within ghee merged akin
2 Waveless mind stringent Preceptor utter-will
3 Word-having-ceased awareness-inquiring (subtle-)body-here ceased-if
4 Boundless awareness merged existence you (are) (!)
Lucid Translation
2 A stringent Preceptor will uttter with
a waveless mind abiding merged in his disciple,
1 even as ghee abides merged in blemishless milk.
3 If the sublte body, wordlessly inquiring into awareness, ceased (to exist) here,
4 You(!) are the Existence, abiding merged with boundless Awareness.
No comments:
Post a Comment