One Word Many Meanings Tamil

Each Classical Tamil word has many possible meanings

Because in incantation languages like Classical Tamil, each word has many possible meanings to it, with mind humbly invoking Lord Siva's Grace, we just have to look into the classical Tamil dictionary for the meaning of each word in a Tirumantiram verse that yields a coherent and wholesome meaning.

Friday, June 28, 2013

TM 179 - Body is only for holding fast unto Sushumna-River-reaching Siva's matted locks

தேய்ந்தற்று ஒழிந்த இளமை(.) கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை(.) அரிய கருமங்கள் 
பாய்ந்தற்ற கங்கை படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே(!)  179.

1  'மெலிந்து'-இடையில்-விட்டு-விலகிப்-போய் வெறுமையாகின்ற வாலிபப்பருவம்(.) கடைசி முறை
2  'அழகமைந்து'-இடையில்-விட்டு-விலகிப்-போன தலைமயிர்(.)
                                                                    எளிதில்-கிடைக்கக்-கூடாத  (முந்தைய-)வினைப்பயன்கள் 
3  '(தானே நம்மை வந்தடைந்து-)முட்டி'-இடையில்-விட்டு-விலகிப்-போன நதி-
                                       சென்றடையும்-'கற்றையாகச்-சேர்ந்த-தலைமயிர்'(-உடைய) சிவபெருமானை
4  ஆராய்ந்து-இருந்து (நீங்கள்) பற்றும்(!)  உயிர்(-உடலில்) உள்ள காலத்தேயே(!) 

நமக்கு உடல் வந்தமைந்திருப்பது, நம் உயிர் உடலில் இலகும்  காலத்திலேயே,
இடையில் (நாம் புற வாழ்வில் மூழ்கியிருந்த காலத்தே, நம் உணர்வினை) விட்டு விலகிப் போன,
(சுழுமுனையாகிய) நதி சென்றடையும் சடையாகிய முடியோடிலகும் சிவபெருமானை
ஆராய்ந்தவாறிருந்து பற்றிக்கொள்வதற்கேயென்க.

1  'Growing-thin'-Breaking-off-in-the-middle Became-unreplenished youth(.)  Last-time
2  'Beauty-abided'-Broke-off-in-the-middle(,) hair-on-the-head(.)
                                                                    'Rare' (past-)action-results
3  'having(-arrived-at-us-of-their-own-accord-and)-butted'-Broke-off-in-the-middle(,) River- 
                                                 reaching-'irregularly-matted-hair'(-possessing) Siva
4  'Inquiring-into-abiding(,)  (you) hold-fast(!) Life(-in-body)-abiding (very-)period(!)
 




Wednesday, June 26, 2013

Our bodily aging is only for us toknow the inner Light of God manifesting the seasons - TM 178

ஆண்டு பலவும்  கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.           178.

1  ஆண்டுகள் பலவும் மிகுந்தன (நம்மில் பலர்க்கும்)(;)  (இருப்பினும்,) இறைவனைச்
2  சூழ்ந்து கொண்டு (அவ்வாறு வயதில் முதிர்ந்தவர்களில்) யாரும்
    (தன்னுட்) புகுந்து (இறைவனை) அறிவார் இல்லை.
3  பருவங்கள் (ஒன்றன் பின் ஒன்றாக) நீண்டவாறு இருந்தன(;)
    (அவ்வாறு அவை) நீண்டு (தேவையான நேரத்தைக்) கொடுத்தவாறு இருப்பினும்(,)
4  (அப்பருவங்களை உந்தி) எழுப்பியவாறிலகும் (இறைவனாகிய) விளக்கின் சுடரினை
    (அம்முதியோர்) அறியமாட்டார்களே.

நாம் நம் உடலின் (வாழ்நாளில் குறைந்து) வயதில் முதிர்வது, 
காலப்பருவங்களை உந்தி எழுப்பியவாறிலகும்
இறைவனின் சுடரினை, நாம் நம்முள் புகுந்து அறிவதற்கேயாமென்க.
 
Year(/s) many-too abounded* (for many.) (But, from among these elderly ones,) Lord
surrounded(,) held-on(,) who-even entered-in -knower(/s)(,) (there are) not (any).
Stretched-out the seasons (of years, by way of lapse of age).
                                                                   Stretched-out(-thus) granted(-time)-though(,)
stirring-up Lamp's Light know-they-not.

* in terms of age

Thursday, June 20, 2013

Body is for accessing the golden lid above the head and merging into the liberating flood of light

மகிழ்கின்ற செல்வமும் மாடும்(,) உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்(.)
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறியாரே.  173.

மகிழ்கின்ற = பருகுகின்ற; செல்வம் = செழிப்பு; மாடு = பக்கம்;
ஆக்கை = நார்; சிமிழ் = சிறிய பெட்டி

Drinking accretion(-and) side(and,) at-once-"together"
"inverting" "water"-upon moving "boat"-akin
"loosening" 'fibre-to'-One Liberation wealth-as
casket-one possessing having-inquired-know-NOT (!)
 
1  பருகுகின்ற (ஆழ்ந்த புலனுணர்வுச்) செழிப்பும், பக்கமும் ('இடை' மற்றும் 'பிங்கலை' நாடிப்பாதைகளின் இழுப்பும்) , 
2  அக்கணமே ஒருசேர 'நிலைகுலையும்' நீரின் மேல் செல்லும் படகினைப் போலாம்.
     (எவ்வாறெனின்,- 
      a)  கவிழும் வரையிலும்,- 
           i)    கீழே இலகிய நீரானது மேலும், நீரின் மேல் இலகிய படகானது கீழும், 
           ii)   படகின் பக்கத்தே இலகிய நீரானது, படகின் உள்ளும்,
     சென்று, படகு நிலைகுலைவது போல, 
     b)   ஆழ்ந்த கனவற்ற உறக்கத்தில் இருந்த வரையிலும்,
            i)   மேலே சஹஸ்ராரச் சக்கரத்தில் இலகிய (அகந்தையின் ஆழ்ந்த புலனுணர்வுச்) செழிப்பானது கீழும் (கீழே மூலாதாரச் 
                  சக்கரத்திலும்),
           ii)   சஹஸ்ராரச் சக்கரத்தைக் கடந்து 1சூக்கும தேகத்தின் நடுவே சற்றே வலப்புறமாக இலகும் ஆன்மாவாம் இதய 
                  குகையில் இலகிய அகந்தையானது அம்மத்தியக்குகையினின்று நழுவிப் பக்கத்திலும், 
           நனவு நிலையில் சென்று, சூக்கும தேகமானது நிலைகுலைகின்றது.)     
3  (உடலினின்று) நெகிழ்கின்ற நாருக்கு (நாராகிய வளியுடன் கலந்திலகும் சூக்கும உடலிற்கு) ஒரு முத்திச்
    செல்வமாக,
4   ஒரு (தலைக்கு மேலே பொன்னிறத் துளையின் மூலம் எட்டியடையும்) 2சிறிய பெட்டியைத்  தாம் பெற்றிருப்பதை
     ஆராய்ந்தறிய மாட்டார்களே(!)

நமக்கு உடல் வந்தமையப்பெற்றது, (நம் தலைக்கு மேலே பொன்னிறத்துளையின் மூலம் எட்டியடையும்) சிறிய பெட்டியை ஆராய்ந்தறிந்து, அங்கே இலகும் ஒளி வெள்ளத்தில் மூழ்கி முத்தியடைதற்கேயென்க.

2Extract from Page 3 of Symbol Dawn in Savitri by Sri Aurobindo
  'Casket' (சிறிய பெட்டி) in this Tirumantiram may refer to the pallid rift (ஒளிவெள்ளத்தினால் வெளுத்த பிளவு) 
   referred to by Sri Aurobindo in Book 1, Canto 1 "Symbol Dawn" in Page 3, Lines 31 to 34 in His Epic English 
   Spiritual Poetry "Savitri". 


" Then through the pallid rift that seemed at first
   Hardly enough for a trickle from the suns,
   Outpoured the revelation and the flame.
   The brief perpetual sign recurred above."

1Extracts from pages 94-95 of Talks with Bhagawan Sri Ramana Maharshi
  19th November, 1935 - Talk 97.

One Mr. Ramachandar, a gentleman from Ambala, asked where the Heart is and what Realisation is.
M.: The Heart is not physical; it is spiritual. Hridayam = hrit + ayam - This is the centre. It is that from which thoughts arise, on 
       which they subsist and where they are resolved. The thoughts are the content of the mind and, they shape the universe. The 
       Heart is the centre of all. Yatova imani bhutani these beings come into existence) etc. is said to be Brahman in the Upanishads. 
       That is the Heart. Brahman is the Heart.

M.: In deep sleep you exist; awake, you remain. The same Self is in both states. The difference is only in the awareness and 
     the nonawareness of the world. The world rises with the mind and sets with the mind. That which rises and sets is not the 
     Self. The Self is different, giving rise to the mind, sustaining it and resolving it. So the Self is the underlying principle.  
       When asked who you are, you place your hand on the right side of the breast and say ‘I am’. There you 
       involuntarily point out the Self.  The Self is thus known.  But the individual is miserable because he confounds the 
     mind and the body with the Self. This confusion is due to wrong knowledge. Elimination of wrong knowledge is alone 
     needed. Such elimination results in Realisation.

1Extracts from page 467 of Talks with Bhagawan Sri Ramana Maharshi

M  When a man dreams, he creates himself (i.e., the ahamkar, the seer) and the surroundings. All of them are later withdrawn into 
     himself.  The one became many, along with the seer. Similarly also, the one becomes many in the waking state. The objective world 
     is really subjective. An astronomer discovers a new star at immeasurable distance and announces that its light takes 
     thousands of light years to reach the earth. Well, where is the star in fact? Is it not in the observer? But people wonder how a 
     huge globe, larger than the Sun, at such a distance can be contained in the brain-cells of a man. The space, the magnitudes and the 
     paradox are all in the mind only. How do they exist there? Inasmuch as you become aware of them, you must admit a light 
     which illumines them.  These thoughts are absent in sleep but rise up on waking. So this light is transient, having an 
    origin and an end. The consciousness of ‘I’ is permanent and continuous. So this cannot be the aforesaid light. It is different 
    but has no independent existence. Therefore it must be abhasa (reflected light). The light in the brain is thus reflected 
    knowledge (abhasa samvit) or reflected being (abhasa sat).   The true knowledge (Samvit) or Being (Sat) is in the centre 
    called Heart (Hridaya). When one wakes up from sleep it is reflected in the head, and so the head is no longer lying prone 
    but rises up. From there the consciousness spreads all over the body and so the superimposed ‘I’ functions as the 
    wakeful entity.


       

Saturday, June 15, 2013

Body is only for segregating sense-impression-accretion from oneself and escaping from death - TM 172

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தை
கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே             172.

தேற்ற = ஐயம் நீக்க; தெளிமின் = ஆராய்வீர்; மின் = முன்னிலை ஏவல் பன்மை விகுதி; 
தெளிந்தீர் = தீர்மானித்தீர்; கலங்கன்மின் = துன்புறுவீர்; 
ஆற்று = செயல்பாட்டு வழிமுறை; பெருக்கு = மிகுதி;
கலக்கி-= சேர்த்துக் குலுக்கி; மலக்காதே = திகைப்புறச் செய்யாதே;
மாற்றி = வேறுபடுத்தி; களைவீர் = சோர்வுறுவீர்; 
மறுத்து = 'வேண்டா' என ஒதுக்கி; செல்வத்தை = செழிப்பை;
கூற்றன் = இயமன்; குதிக்கலும் = தப்பிப் பாய்ந்து செல்லலும்

1   ஐயம் நீக்க,  ஆராய்வீர்களாக;  (ஆராய்ந்து) தீர்மானித்தீர்கள், (அதன் பின்னர், தீர்மானித்தவண்ணம்) 
    செயல்படும் வழிமுறைகளின் மிகுதியில் துன்புறுவீர்களாக;
2  (புலன் உணர்வுப் பொறிப்புச்) செழிப்பினை (தானாம் ஆன்மாவுடன்) சேர்த்துக் குலுக்கித் (தன்னைத்) திகைப்புறச்  
     செய்யாமலே, (அச்செழிப்பினை தன்னின்று) வேறுபடுத்திச் (அச்செழிப்பு முழுமையாக நீங்கும் வரையிலும், 
     அவ்வாறு வேறுபடுத்தலை முயன்றவாறுசோர்வுறுவீர்களாக;
3  இயமன் வருந்தருணத்தில் தப்பிப் பாய்ந்து செல்லுதலும் அவ்வாறு வேறுபடுத்தலேயாமே.

உடல் நமக்கு வந்தமையப் பெற்றது, 
புலன் உணர்வுச் செழிப்பினைத் தன்னின்று வேறுபடுத்தி, 
மரணத்தின் பிடியினின்று தப்பிப் பிழைத்தற்கேயாமென்க.  
Doubt-to-resolve, inquire; having concluded, suffer,
means- abundance-in; mixing-up, bewildering-not,
separating, exhausted-be; 'Not require', thus refusing your accretion (of sense-impressions),
Death-god arriving-time escaping and leaping over is(!)  172.






Thursday, June 6, 2013

Body is only for beholding the Light seeing the body as an object - TM 170


முதலாம் தந்திரம் - 
3 - செல்வம்0 நிலையாமை 

தன்-அது1சாயை தனக்குதவா2து கண்டும்2
என்-அது1  (என்-)மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்
உன்-உயிர் போம்-உடல் ஒக்கப் பிறந்தது
கண்-அது3 காண்-ஒளி கண்டுகொளீரே.  170.

1  Self-of shadow self-helping-not seeing-even-after
2  my-of my-in thus abide (the-)ignorant
3  Your-life fleeting-body adjoining born-was
4  Body-that seeing-Light having-seen-own(-it-up-as-the-Self).

சாயை = நிழல்; 
மாடு = "இல்", "இடத்தில்" என்ற பொருட்களிலகும் ஏழாம் வேற்றுமை உருபு; 
கண் = உடம்பு 

1  தன்னுடைய நிழல் தனக்கு உதவாது என்று கண்டு கொண்ட பின்னரும்
2  என்  "உடையது", "இல்" என்றவாறு இருப்பார்கள் அறிவில்லாதவர்கள்.
3  உன்னுடைய உயிரானது "நிலையின்றி அழிந்து போகின்ற" உடல் ஒருசேரப் பிறந்ததாம்.
4  (உடல் அவ்வாறு அழிந்து போவதன் முன்னரே) அந்த உடலினைக் காண்கின்ற
   ஒளியினைக் கண்டு கொள்வீர்களாக.

0  செல்வம் = செழிப்பு; தன்மை-முன்னிலையாகிய அகந்தை, முன்னிலை படர்க்கை எண்ணங்களுடன் இணைந்து, மனமாகச் 
    செழிப்புற்று விரிவடைவது குறித்து, செல்வம் என்ற சொல்,- 
    a)  நுகரத்தக்க பொருட்செல்வத்தை மட்டுமன்றி, 
    b)  நுகர்வோனாகிய மனத்தையும், 
    குறிக்கவல்லதாம்.

அது = "க்கு", "உடைய" என்ற பொருட்களிலிலகும் ஆறாம் வேற்றுமை உருபு; 
2 "உதவாது" மற்றும் "கண்டும்" என்றவாறாக இவ்விரண்டு சொற்களையும் 
     சரியாகப் பொருளமைதற்குறித்துத் திருத்தியமைக்க நேர்ந்துள்ளது. 
3 அது = முன்னிலையில் குறிப்பிடப்பெறும் ஒரு பொருள் 
4  "Chidabhasa" என்று தன் "Pancadasi" என்னும் ஆன்மீக நூலில் சுவாமி வித்யாரண்யரால் குறிப்பிடப்பெறும், 
     சீவனின் மனத்தில் ஆன்மாவின் பிரதிபலிப்பாம் சச்சிதானந்த ஒளி.

உவமையணியின் விளக்கம்
a)  சூரிய மற்றும் சந்திர ஒளி நமது பௌதிக உடலின் தலைக்கு நேர்மேலாகச் செங்குத்தாக 
     இலகுங்காலும், 
b)  மற்றும் அவ்விரண்டு ஒளிகளும் இலகாத வேளைகலில், காரிருள் சூழ்ந்திலகுங்காலும்,
நமது "உடலிலேயே"அதன் நிழல் அமைந்திலகுகின்றது.

நமது பௌதிக உடலின் தலைக்கி நேர்மேலாகச் செங்குத்தாகவன்றி, ஆனால் உடலிற்கு மேலாக இலகுங்கால், நிழலானது "உடலுடையதாக" அதனின்று வேறுபட்டு இலகுகின்றது. 

இருகாலும், நிழலானது அவ்வுடலுக்கு எவ்வித உதவியும் செய்வதாகவமைதில்லை.  
இங்கு, நிழலும், அந்நிழல் பொருந்தும் நமது பௌதிக உடலும், 
இத்திருமந்திரத்தில் "நாம் எளிதில் அறியும்வண்ணம் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ள உவமானமாம்".

இதுபோன்றே, நமது நனவு நிலையில், 
a)  பல பொருட்கள், நாமாகிய நமது பௌதிக உடலுடையனவாக அவ்வுடலைச் சுற்றியிலகுகின்றன; மற்றும், 
b)  பல சிறப்புக்கள், நாமாகிய நமது பௌதிக உடலில் அமைந்திலகுகின்றன.

நம்முடையதாகவோ, நம்மிலிலகுவதாகவோ, நாம் கருதும் எவையும், நமது உயிராகிய சூக்குமவுடலுக்கு எவ்வுதவியையும்  செய்வதாகவமைதில்லை.  இங்கு, நமது பௌதிக உடலுடைய மற்றும் உடலில் அமைந்திலகும் பொருட்கள் மற்றும் சிறப்புக்களும், நமது உயிராகிய சூக்கும உடலும், இத்திருமந்திரத்தில் "நாமே முயன்று உய்த்துணரும்வண்ணம் சூக்குமமாகக் குறிப்படப்பட்டுள்ள உவமேயமாம்"

இவ்வாறாக, இத்திருமந்திரத்தின் இம்முதலாம் உவமையிலே,  

a)  i)   நமது உயிராகிய சூக்கும உடலுக்கு யாதோர் உதவியும் செய்திடாத, 
           நாமாகிய பௌதிக உடலுடைய மற்றும் பௌதிக உடலிலிலகும் பொருட்கள், 
     ii)  நமது பௌதிக உடலுக்கு யாதோர் உதவியையும் செய்திடாத, 
           நமது பௌதிக உடலின் நிழலுடனும்,

b)  i)   நமது உயிராகிய சூக்கும உடல்,
     ii)  நமது பௌதிக உடலுடனும்,

இத்திருமந்திரத்தில் ஒப்பிடப்பட்டுள்ளன எனற்றகும்.


அவ்வாறே, இத்திருமந்திரத்தின் இரண்டாம் உவமையிலே,

a)   "நாமே முயன்று உய்த்துணரும்வண்ணம் சூக்குமமாகக் குறிப்படப்பட்டுள்ள உவமானமாம்"
         நாமாகிய பௌதிக உடலோடு மற்றும் பௌதிக உடலில் ஒருசேர (முன்வினைப்பயனாகிய விதிவயத்தினால்)  
         வந்தமைந்துள்ள பொருட்களைப் போலவே, 

b)   "நாம் எளிதில் அறியும்வண்ணம் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ள உவமேயமாம்"
        நமது உயிராகிய சூக்கும உடலோடு மற்றும் சூக்கும உடலிடத்தில் நமது பௌதிக உடல் வந்தமைந்துள்ளதாம்.

சூக்கும உடலானது "நான் இந்த பௌதிக உடல்" என்னும் மூல எண்ணமாகிய தன்மை-முன்னிலை எண்ணத்தோடு உதித்தற்குறித்து, பௌதிக உடல் சூக்கும உடலோடு வந்தமைந்தது எனலாம்.  ஆன்மீக விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில், சூக்கும உடலானது பௌதிக உடலைச் ஊடுருவிச் சூழ்ந்து உணரப்பெறுங்கால், பௌதிக உடல் சூக்கும உடலில் வந்தமைந்தது எனலாம்.

a)  முதல் உவமையிலே உவமானத்தை வெளிப்படையாகக் விவரித்த திருமூலர், 
b)  இரண்டாம் உவமையிலே உவமேயத்தை வெளிப்படையாக விவரித்து, 
இத்திருமந்திரத்தின் உட்கிடக்கையை உணர்தலை எளிதாக்கியருளினரென்க. 

உடல் நமக்கு வந்தமைந்திருப்பது,
a)  அவ்வுடலைத் தானாகக் கொள்வதை விடுத்து, 
b)  i)   அவ்வுடலை முன்னிலையாகக் காணும் எழுவாயாகிய ஒளியைக் கண்டு,
     ii)  அவ்வொளியைத் தானாகக் கொள்வதற்கேயென்க.

"Merging with Siva" என்னும் தம் ஆன்மீக நூலில் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி கூறியருளியிருக்கும் வண்ணம்,
 அனாஹத மற்றும் விசுத்தி சக்கரங்களிலே அனுபவிக்கப்பெறும்,

a)   சச்சிதானந்தம் எங்கும் நிறைந்துள்ள "பிராண சக்தியின் சாரம்" என்பதினாலும், 
      அன்றியும் அவ்வனுபவத்தினால் ஒருவர் இவ்வண்டத்தோடு தம் ஒருமையை உணர்வதினாலும்,
      மற்றும் அவ்வாறு ஒருமையை உணர்தலே ஆன்மீக அனுபவத்தின் சாரமென்பதினாலும்,

b)  ஒரு ஆன்மீக சாதகர் அகமுகப்படுகையில் தன் இதயக்குகையில் ஒளிக்கிரணங்களுடன் தொடர்பு கொள்வதினாலேயே 
      அச்ச்ச்சிதானந்த அனுபவத்தை முழுமையாகப் பெறவியலுமென்பதினாலும்,

c)  ஒருவர் முதலில் "தெள்ளிய வெள்ளொளியிலிலகிப் பின்னர் அதனை ஊடுருவிச் 
     சச்சிதானந்தத்தில் ஆழ்ந்துத் தானாகிய ஆன்மஞானத்தை எய்திய பின்னரே 
     சிவனோடு ஐக்கியமாதல் எனப்படும் விச்வக்ராசத்தை அனுபவிக்கிறாரென்பதினாலும், 

d)  சச்சிதானந்தத்தையனுபவித்தலே ஒளியினை அனுபவித்தலென்பதினாலும்,

e)  நம் சூக்கும உடலின் மையமாக இருப்பது சச்சிதானந்தமேயென்பதினாலும்,

f)   சச்சிதானந்தமே எல்லா உருவங்களையும் ஊடுருவி நிற்கும் ஒளியென்பதினாலும்,

g)  சச்சிதானந்தமே நமது இருப்பிடம் மற்றும்  சுற்றுச்சூழல்களை ஊடுருவியவாறு 
     எல்லாப் பொருட்களின் துகள்களின்  வாயிலாகவும் பிதுங்கி வழிந்தவாறிலகும் 
     நிலைத்த உருவமற்ற எப்பொழுதும் மாறியபடியிலகும் ஒளிக்கோசமானதினாலும், 

அச்சச்சிதானந்த ஒளியே இத்திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 

நம் பௌதிக உடலை முன்னிலைப்படுத்திக் காணும் ஒளியாமென்க. 

இருப்பினும், 

சுவாமி வித்யாரண்யர் தனது "Pancadasi" என்னும் ஆன்மீக நூலில் கூறியருளியிருக்கும்வண்ணம்,
a)  "Chidabhasa" என்னும் சீவனின் புத்தியில் ஆன்மாவின் பிரதிபலிப்பினாலேயே, சீவனின்  புத்தி இயங்குகின்றது என்பதினாலும்,
b)  ஆன்மாவாம் தன்னை உணரத் துவங்குகையில், அப்பிரதிபலிப்பு தன்னில் ஒடுங்கத் துவங்குகின்றது என்பதினாலும்,

சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி தனது "Merging with Siva" என்னும் ஆன்மீகச் சைவ நூலில் கூறியருளியிருக்கும்வண்ணம்,
a)   ஆன்மாவானது கால தேச வர்த்தமானங்கட்கு அப்பாற்பட்டு என்றுமிலகும் பரசிவமானமையினாலும்,

b)  தோன்றி நிற்பவைகளை ஊடுருவிப் பிரதிபலித்து நிற்பது என்றுமிலகும் சச்சிதானந்தமேயானமையினாலும், 

இத்திருமந்திரத்தில் உடலினைக் காணும் ஒளியாகக் குறிப்பிடப்பெற்றது 
ஆன்மாவாம் தன்னை நாடும் தனி மனிதனைப் பொருத்தவரையில்,
a)  சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமியால் குறிப்பிடப்பெற்றுள்ள பிரதிபலிக்கும் திறனுள்ள சச்சிதானந்த ஒளியின்,
b)  சுவாமி வித்யாரண்யரால் குறிப்பிடப்பெற்றுள்ள "Chidabhasa" என்ற 
     அத்தனி மனிதனின் புத்தியில் பிரகாசிக்கும் பிரதிபலிப்பே,
என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளல் மிகத்தகும்.



Wednesday, June 5, 2013

Body is only for depending on God, before wealth departs from us - TM 168

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பின்-ஐ-அவன் மாதவம் அன்றே ?   168

தெருளும் = தெளிவாக உணரும்; செல்வன் = இறைவன்; சேரின் = அடுத்திருப்பின்;
மருளும் = ஒப்பாகும்; ஐ = ஆசான் = ஆன்மீக சத்குரு;  அன்றே = அல்லவா ?

1  மனமுவந்து கொடுக்கும் அரசனும், யானையும், தேரும்
2  செல்வமும், பிறர் பெறுவதற்குச் செல்லுமுன்பாக
3  தெளிவுறும் ஆன்மாவுடன் இறைவனை அடுத்திருப்பின்,
4  (அவ்வாறு இறைவனை அடுத்திருத்தல்) பின்னர்
    ஆன்மீக சத்குருவானவரின் மாதவத்திற்கொப்பாகும் அல்லவா ?

உடல் நமக்கு வந்தமையப் பெற்றது, அவ்வுடலின் சுற்றுச்சூழலிலமைந்த செல்வங்களையிழக்குமுன்னரே, நம் ஆன்மீக சத்குருவின் மாதவத்திற்கொப்பாக, இறைவனைத் தெளிவுற அடுத்திருத்தற்கேயென்க.

Graciously-granting king elephant chariot
Wealth others-obtain to-go before
Clarifying soul-with God depend-upon--if
Resemble-will later-Guru-His great-penance is-it-not(!)