One Word Many Meanings Tamil

Each Classical Tamil word has many possible meanings

Because in incantation languages like Classical Tamil, each word has many possible meanings to it, with mind humbly invoking Lord Siva's Grace, we just have to look into the classical Tamil dictionary for the meaning of each word in a Tirumantiram verse that yields a coherent and wholesome meaning.

Wednesday, June 5, 2013

Body is only for depending on God, before wealth departs from us - TM 168

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பின்-ஐ-அவன் மாதவம் அன்றே ?   168

தெருளும் = தெளிவாக உணரும்; செல்வன் = இறைவன்; சேரின் = அடுத்திருப்பின்;
மருளும் = ஒப்பாகும்; ஐ = ஆசான் = ஆன்மீக சத்குரு;  அன்றே = அல்லவா ?

1  மனமுவந்து கொடுக்கும் அரசனும், யானையும், தேரும்
2  செல்வமும், பிறர் பெறுவதற்குச் செல்லுமுன்பாக
3  தெளிவுறும் ஆன்மாவுடன் இறைவனை அடுத்திருப்பின்,
4  (அவ்வாறு இறைவனை அடுத்திருத்தல்) பின்னர்
    ஆன்மீக சத்குருவானவரின் மாதவத்திற்கொப்பாகும் அல்லவா ?

உடல் நமக்கு வந்தமையப் பெற்றது, அவ்வுடலின் சுற்றுச்சூழலிலமைந்த செல்வங்களையிழக்குமுன்னரே, நம் ஆன்மீக சத்குருவின் மாதவத்திற்கொப்பாக, இறைவனைத் தெளிவுற அடுத்திருத்தற்கேயென்க.

Graciously-granting king elephant chariot
Wealth others-obtain to-go before
Clarifying soul-with God depend-upon--if
Resemble-will later-Guru-His great-penance is-it-not(!)





No comments:

Post a Comment