தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தை
கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே 172.
தேற்ற = ஐயம் நீக்க; தெளிமின் = ஆராய்வீர்; மின் = முன்னிலை ஏவல் பன்மை விகுதி;
தெளிந்தீர் = தீர்மானித்தீர்; கலங்கன்மின் = துன்புறுவீர்;
ஆற்று = செயல்பாட்டு வழிமுறை; பெருக்கு = மிகுதி;
கலக்கி-= சேர்த்துக் குலுக்கி; மலக்காதே = திகைப்புறச் செய்யாதே;
மாற்றி = வேறுபடுத்தி; களைவீர் = சோர்வுறுவீர்;
மறுத்து = 'வேண்டா' என ஒதுக்கி; செல்வத்தை = செழிப்பை;
கூற்றன் = இயமன்; குதிக்கலும் = தப்பிப் பாய்ந்து செல்லலும்
1 ஐயம் நீக்க, ஆராய்வீர்களாக; (ஆராய்ந்து) தீர்மானித்தீர்கள், (அதன் பின்னர், தீர்மானித்தவண்ணம்)
செயல்படும் வழிமுறைகளின் மிகுதியில் துன்புறுவீர்களாக;
2 (புலன் உணர்வுப் பொறிப்புச்) செழிப்பினை (தானாம் ஆன்மாவுடன்) சேர்த்துக் குலுக்கித் (தன்னைத்) திகைப்புறச்
செய்யாமலே, (அச்செழிப்பினை தன்னின்று) வேறுபடுத்திச் (அச்செழிப்பு முழுமையாக நீங்கும் வரையிலும்,
அவ்வாறு வேறுபடுத்தலை முயன்றவாறு) சோர்வுறுவீர்களாக;
3 இயமன் வருந்தருணத்தில் தப்பிப் பாய்ந்து செல்லுதலும் அவ்வாறு வேறுபடுத்தலேயாமே.
உடல் நமக்கு வந்தமையப் பெற்றது,
புலன் உணர்வுச் செழிப்பினைத் தன்னின்று வேறுபடுத்தி,
மரணத்தின் பிடியினின்று தப்பிப் பிழைத்தற்கேயாமென்க.
Doubt-to-resolve, inquire; having concluded, suffer,
means- abundance-in; mixing-up, bewildering-not,
separating, exhausted-be; 'Not require', thus refusing your accretion (of sense-impressions),
Death-god arriving-time escaping and leaping over is(!) 172.

No comments:
Post a Comment